IBC Tamil
ஹோமாகம காவல் நிலைய மரணம் : குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றின் உத்தரவு
போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட உதவி காவல்துறை அதிகாரியை, ஹோமாகம நீதவான் ரஜிந்திர ஜயசூரிய இன்று (29) நவ. 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், சந்தேக நபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர், ஹோமாகம தலைமையக காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த ரஜித ...