உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விடிந்தால் குடமுழுக்கு : திடீரென வந்து தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் பிரதான சாலை ஓரம் உள்ள சேது விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர் சிலை சில முறை காணாமல் போய்விட்டது. அதனால் கிராம மக்கள் கோயில் திருப்பணி செய்து சுமார் 3 டன் மதிப்பில் பிரமாண்ட கருங்கல் பிள்ளையார் சிலை அமைத்துள்ளனர். இந்த கோயில் நாளை 30 ந் தேதி வெள்ளிக் கிழமை குடமுழுக்கு நடத்தத் தேதி குறிக்கப்பட்டு விழாக் குழுவினர் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளனர். விடிந்தால் குடமுழுக்கு ஒரு பக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்து சீர் கொண்டு வந்த கிராம மக்களை விழாக் குழுவினர் வரவேற்று உபசரிக்க மறு பக்கம் யாகசாலை பூஜைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத…