Daily Thanthi
சென்னையில் தொழில்நுட்ப கோளாறால் கத்தார் விமானம் ரத்து: 207 பயணிகள் தவிப்பு
சென்னை, சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கத்தார் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 207 பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 207 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 219 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, ஓடுபாதைக்குச்…