Dinamani
30.10.1976: அரசியல் சாஸனத்தில் கடமைகள் - லோகசபையில் ஒருமனதாக ஏற்பு
புது டில்லி, அக். 29 - அடிப்படை கடமைகள் பற்றிய அத்தியாயம் ஒன்றை அரசியல் சட்டத்தில் சேர்ப்பதற்கு வகை செய்யும் ஷரத்து இன்று லோகசபையில் நிறைவேறியது. இந்தக் கடமைகளை வகுத்ததில் பிரதமருக்கு பங்கு உண்டு என்று சட்ட மந்திரி கோகலே கூறினார். 44-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் இன்று 5 ஷரத்துக்கள் மீது வோட்டு எடுக்கப்பட்டன. பிரஜைகளுக்கு சமநீதி வாய்ப்பும், இலவச சட்ட உதவியும் கிடைக்கச் செய்வது; தொழில்களின் நிர்வாகத்தில்…