Nakkheeran
“அவர்களால் கண்டிப்பாக நிரூபிக்கவே முடியாது” - அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி!
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் இன்று (26.10.2026) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்…