Indian Express Tamil
'வில்வ இலையை வாயில் திணித்து சித்திரவதை, போலீஸ் போன அப்புறம் எங்களை என்ன செய்வாங்களோ?': கிறிஸ்தவ குடும்பங்கள் அலறல்
Ravik Bhattacharya, Sweety Kumari மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் நான்கு குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றன. இதில் உறவினர்களான மூன்று குடும்பங்கள் மீது கடந்த அக்டோபர் 18 முதல் 20 வரை தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மண் வீட்டின் வாசலில் கணவர், பதின்ம வயது மகள் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மாமனாருடன் அமர்ந்திருக்கும் 40 வயதுப் பெண், கடந்த அக்டோபர் 18 அன்று தான் சந்தித்த கொடூரத்தை விவரிக்கிறார். "அன்று மதியம் 3:30 மணி இருக்கும். மூன்று பெண்கள் உட்பட…