உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கக் கூடாது, ஆனால்...’ - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதாவது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதன் பின்னர் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப அளித்து அந்த ரூ.10யை பெற்றுக்கொள்ளலாம் என நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், சில கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10யை வசூலித்த பின், அந்த காலி பாட்டில்களை கொடுத்தால் ரூ.10யை ஊழியர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்…