Indian Express Tamil
சிறு துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தல்; அந்தத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாய் திறக்காதது ஏன்? ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கேள்வி
தமிழ்நாட்டில் சிறு துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும் புதுச்சேரி எம்.எல்.ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அனைத்துச் சிக்கல்களுக்கும் பேசும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தன் சொந்தத் துறையிலேயே நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இதுவரை ஒரு சிறிய விளக்கம் கூட அளிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை- மாதவரத்தில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி மாநில…