உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் மீண்டும் சிறையிலடைப்பு..!

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய 17 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து காவலரைத் தாக்கி விட்டு அவர்கள் தப்பியோடியதாக ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தெரிவித்துள்ளார். கைதிகள் தப்பிய தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதுமுள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டதாகவும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கைதிகளைப் பிடிக்க கிராம மக்களும் உதவியதாக டி.எஸ்.பி விஷ்ணுப் பிரியா கூறினார். மலைப்பகுதிகளில் பதுங்கிய கைதிகளை டிரோன் மூலம் கண்டுபிடித்து மடக்கியதாகவும் காலணி அணியாமல் கரடு முரடான…