Indian Express Tamil
தீபாவளிக்கு ரேஷனில் மலிவு விலை மளிகைத் தொகுப்பு: எப்படி பெறுவது? அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு வெறும் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படும் திட்டம் வெள்ளிக் கிழமை (அக்டோபர் 30, 2026) முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் உள்ள 128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 1.450 கிலோ எடை கொண்ட இந்தத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புளி (தலா 250 கிராம்), தனியா, பூண்டு (தலா 150 கிராம்), மிளகாய், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு (தலா 100 கிராம்), சீரகம் மற்றும் சோம்பு (தலா 50 கிராம்) ஆகியவை சுற்றுச்சூழலு…