உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலையில்லை”; இளைஞர்களை அச்சுறுத்துகிறதா பாஜக அரசு?

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்திய நாத் பொறுப்பு வகித்து வருகிறார். இதனிடையே, அடுத்த ஆண்டு அங்கு மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் அட்ர்ஹிர்ச்சியை ஏற்படுத்து. அம்மாநிலத்தின் பணியாளர் நலத்துறை சார்பில் கடந்த புதன் கிழமை (28-10-26) அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ”வன்முறை மூலமாக ஆட்சி மாற்றம் கோரும் அல்லது அரசு அமைப்புகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது” என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ”ஒவ்வொரு அரசுப் பணிகளுக்கும் தேர்வா…