உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நந்தனத்தில் விஜய்; பசும்பொன்னில் ஸ்டாலின்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாளும், 64-வது குருபூஜை விழாவும் இன்று (அக்டோபர் 30) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள அவரது உருவச்சிலைகளுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்துத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரளாகக் கலந…