Daily Thanthi
லாரியை முற்றுகையிட்ட யானை: யூ-டர்ன் செய்து தப்பிய வாகன ஓட்டிகள்
ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் மலைப்பாதையில், கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை கார்களைத் துரத்தியதால், வாகன ஓட்டிகள் அலறியடித்தபடி வாகனங்களை யூ-டர்ன் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு லாரி முற்றுகை தமிழக - கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் ஆசனூர் மற்றும் காரப்பள்ளம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன…