Indian Express Tamil
சென்னை - பெங்களூரு 3 மணி நேரப் பயணம்: இறுதிக் கட்டம் 14 கி.மீ. சாலைப் பணிக்கு ரூ.614 கோடி டெண்டர்: முழு விவரம்
சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கில் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவுச் சாலைத் திட்டத்தில், தமிழக எல்லைக்குள் நிலுவையில் உள்ள எஞ்சிய 14 கிலோமீட்டர் நீளச் சாலைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரூ.614 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) புதிய டெண்டர் அறிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு இடையிலான விரைவுப் போக்குவரத்துப் பாதையை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எஞ்சியுள்ள வழித்தடங்களை விரைந்து முடிக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு பெருநகரங்களுக்கும்…