உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மண்சரிவு பாதிப்புக்குப் பின் இயல்புநிலை: குன்னூர் - பர்லியார் இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை, 6 நாட்களுக்குப் பிறகு இன்று (30.10.2026) மீண்டும் தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பழங்குடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயக்கப்படும் இந்த பேருந்து சேவையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் தீவிர மழை பெய்தது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையில், பர்லியார் பகுதியில் அதிகபட்சமாக 25 செ.மீ மழை பதிவானது. இந்த கனமழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்…