’எதிர்க்கட்சி தலைவர் நியமனம் ரத்து’: 10 நாட்கள் கெடு விதித்த நீதிமன்றம்
சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 207 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியமைத்தது. இதையடுத்து, 80 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மாறியது. இக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாயா நியமிக்கப்பட்டார். ஆனால், இதற்குக் கட்சியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட அதிருப்தி காரண…