கொரட்டூர் ரெயில் நிலையத்தில் சிக்கிய போதை பொருட்கள்- சமூக வலைதளம் மூலம் விற்பனை செய்து வந்த இளைஞர் கைது
சென்னை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த 26 வயது இளைஞரைக் கொரட்டூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3,500 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையத்தில் சிக்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட நபர் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித் குமார் (26…