'திமுகவின் முடிவு ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஆபத்து'-திருமாவளவன் காட்டம்
திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவின் நிலைப்பாடு குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற தொகுதி மறுவரையறை மற்றும் எண்ணிக்கை குறித்த மசோதா மீது திமுக எப்படிப்பட்ட முடிவு எடுத்திருக்கிறது என்பதை நீங்கள் அனேகமாக அறிந்திருப்பீர்கள். நேற்றைக்கும் மு.க.ஸ்டாலினுடைய அறிக்கையை வந்திருக்கிறது. இப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற எம்பிக்கள்…