உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

காவல் நிலையத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் சேகர்பாபு; போலீசார் தீவிர விசாரணை

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். அன்று மாலை, கைது செய்யப்ப்பட்ட அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்தனர். மேலும் தங்களை உள்ளே அனுமதிக…