கோவையில் பறவைக் காய்ச்சல் உறுதி: கோழிப் பண்ணைகளுக்கு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்; தமிழகம் - கேரளா எல்லையில் தீவிர சோதனை
கோவையில் குளத்து நாரைகளுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கியப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக - கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தாபுதூர் பி.கே.ஆர். நகர் பகுதியில் உள்ள ஓடைக்கு அருகே, கடந்த 18-ம் தேதி 14 குளத்து நாரைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், இறந்த நாரைகளின் உடல்களை மீட்ட…