கனடா: வீட்டின் படுக்கையில் சுருண்டு படுத்துக் கிடந்த காட்டு ஓநாய்!
ஒட்டாவா, கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் காட்டு ஓநாய் (கொயோட்டி) குட்டி ஒன்று சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திறந்திருந்த கதவு வழியே நுழைந்த காட்டு ஓநாய் கனட நாட்டில் உள்ள டொராண்டோவின் கிறிஸ்டி பிட்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆலிஸ் கென்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்யும் பணியாளர் வருவதற்காக வழக்கம்போல தன் வீட்டின் கதவைத் திறந்து…