செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சர்ச்சை: சிபிசிஐடி போலீஸார் அடித்து துன்புறுத்தியதாக எஸ்.பி.யிடம் 3 இளைஞர்கள் புகார்
விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், விசாரணை என்ற பெயரில் தங்களை அடித்து துன்புறுத்தியதாக விழுப்புரம் எஸ்.பி.யிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 12-ம் தேதி மாயமானார். உள்ளூர் போலீஸார் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கை சிபிசிஐடியிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. உள்ளூர்…