டெல்டாவில் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி, வரும் டிசம்பர் 15-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார். திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில கவுரவத் தலைவர் நன்னிலம் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "காவிரி டெல்டா மாவட்ட…