திருமலை வேணுகோபால சுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு ஒத்திகை..!
திருமலையில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில், தீவிரவாத தாக்குதல் போன்ற அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அக்டோபஸ் கமாண்டோ படை வீரர்களின் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கமாண்டோ படையினருடன் காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தீயணைப்புத் துறையினர், கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோரும் ஒத்திகையில் பங்கேற்றனர்.