தொகுதி மறுவரையறை மசோதா; தி.மு.க ஆதரவு: வைகோ கொடுத்த ரியாக்சன்
தஞ்சையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மேல்நிலை மாநிலங்கள், கீழ்நிலை மாநிலங்களுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க சட்டப்படியோ, ஹெல்சின்கி விதிகளின்படியோ எந்த உரிமையும் இல்லை, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவதில் அகந்தையுடன் செயல்படுவதற்கு, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசே காரணம். 1914-ஆம் ஆண்டு அனந்தகுமார் வீட்டில் நடந்த கூட்டத்தில் அப்போதைய சுற்றுச்சூ…