Samayam Tamil
முதல்வர் விஜய் ஜாடையில் பெரியப்பா: நீலாங்கரை Home-ல் அமல் ராஜசேகரனின் கடைசி நாட்கள்
சென்னை நீலாங்கரையில் உள்ள Mother Josephine Vannini என்ற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. அமல் ராஜசேகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றுள்ளார். முன்னதாக இவரது பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் நேரில் வருகை புரிந்துள்ளனர். சிறுவயதில் பலமுறை பெரியப்பா, பெரியம்மா உடன் நேரம் செலவிட்ட நிலையில், அமல் ராஜசேகரனின் மறைவு முதலமைச்சர் விஜய்க்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.