Indian Express Tamil
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை: குன்னூரில் பொதுமக்கள் கடும் அச்சம்
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றித் திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் வனவிலங்குகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்களை வேட்டையாடிச் செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், குன்னூர் அருகே அமைந்துள்ள பந்துமை குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று செல்லப் பிராணிகளை வேட்டையாடுவதற்காக உலா வந்துள்ளது. சிறுத்தை குடியிருப்புப…