Maalaimalar
மாநகராட்சி சமூகநலக் கூட ஊழியர்கள், சகி மையப் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குக- அன்புமணி
சென்னை மாநகராட்சி மற்றும் சகி மையங்களில் பணியாற்றும் 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அவர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும்…