Samayam Tamil
விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் - புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.