Indian Express Tamil
தேவருக்கு மட்டும் 'பெருமகனார்'; முத்துலட்சுமிக்கு 'ரெட்டி'-யா? ஆதவ் அர்ஜூனா பதிவால் வெடித்த சர்ச்சை
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக ஊடகப் பதிவில் தேவர் என்பதை தவிர்த்து விட்டு முத்துராமலிங்கம் பெருமகனார் என பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று (அக்டோபர் 30 ஆம் தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அ…