உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிரெட் இருக்கா? 10 நிமிடத்தில் வாயில் கரையும் பஞ்சு போன்ற ஜாமூன் ரெடி

கடைகளில் வாங்குவது போன்ற அதே சுவையிலும் மிருதுவான தன்மையிலும், இனி வீட்டிலேயே சுவையான குலாப் ஜாமுன் மிக எளிதாகத் தயாரிக்கலாம். இதற்கு பெரிய தயாரிப்புகளோ அல்லது சிக்கலான பொருட்களோ தேவையில்லை. வீடுகளிலேயே எப்போதும் கிடைக்கும் ரொட்டி, பால் மற்றும் சர்க்கரை மட்டுமே போதுமானது. திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சாப்பிடத் தோன்றினாலோ, ஒரு சில நிமிடங்களில் இதைச் செய்துவிடலாம். சமையலில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கூட மிக எளிதாக இதைத் தயாரிக்க முடியும். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 6 முதல் 8 பால் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 1 கப் ஏலக்காய் – 3 எண்ணெய் செய்முறை…