Indian Express Tamil
விஜய் குடும்பத்தில் திடீர் சோகம்: பெரியம்மா மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் அண்ணன் மனைவியுமான அமல் ராஜசேகரன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். சிறுவயதில் அவரிடம் பலமுறை நேரம் செலவிட்ட நினைவுகளைக் கொண்ட விஜய்க்கு இந்த மறைவு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அரசுப் பணிகள் மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பிஸியான பொது நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும், குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக…