Polimer News
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பெருந்தன்மையுடன் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வேன் - சீமான்
இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு சீமானை ஆதரிப்பது பற்றி தெரிவிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த சீமானுக்கு தி.மு.க. ஆதரவளிக்குமா? என பசும்பொன்னில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பெருந்தன்மையுடன் தன்னை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வேன் என சீமான் அறிவித்துள்ளார். பசும்பொன்னில் பேட்டியளித்த அவர், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்தால் தான் எப்படி வேண்டாம் என கூறுவேன்? பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா? என கேள்வி எழுப்பினார…