Indian Express Tamil
கடற்கரையில் புதைக்கப்பட்ட உடல்: நடிகை ராதிகா வீட்டு பணிப் பெண்ணின் மகன் கொடூர கொலை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். அவரது வீட்டில் வேலை செய்யும் பெண்மணி எழில்செல்வி. இவரின் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பண்ருட்டி அருகே சிறுவத்தூரை சேர்ந்த எழில்செல்வியின் மகன் பிரசாத் (19). இவர் சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வேலை செய்து வரும் தாய் எழில் செல்வியை பார்க்க சென்னை செல்வதாக கூறியுள்ளார். அப்படி சென்ற பிரசாத் வீடு திரும்பவில்லை. விசாரணையில் பிரசாத்தை அவரது நண்பர்கள் தேவராசு, தினேஷ் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி கடற்கரையில் பிரசாத்தை கொலை செய்து அங்கேயே புதைத்த…