Nakkheeran
பெற்ற தாயைக் கொ*ன்ற மகன்; ஜாமீனில் வெளியே வந்தவுடன் அரங்கேறிய கொ*டூரம்!
மது போதையில் பெற்ற தாயையே மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தர்மபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சித்தன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு சின்னபாப்பா என்ற மனைவியும் தேவராஜ் (19) என்ற மகனும் உள்ளனர். மகன் தேவராஜ் மதுபோதைக்கும் கஞ்சா போதைக்கும் அடிமையாகி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் அவர் அடிக்கடி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தர்மபுரி இண்டூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் கத்தியுடன் பொதுமக்களிடமும் காவல்துறையினரிடமும் தேவராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம்…