Nakkheeran
கல்யாண வீட்டில் சீரியல் தோரணம் அகற்றிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை - கவிதா தம்பதியரின் மகன் ரூபன் (வயது 13). கவிதா தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசிக்கிறார். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய ரூபன் சில வருடங்களாகத் தனது பகுதியில் மைக் செட் வாடகைக்கு விடும் பாண்டியன் என்பருடன் நிகழ்ச்சிகளுக்கு மைக் செட், சீரியல் பல்ப் தோரணங்கள் கட்ட சென்று வந்துள்ளார். இந்நிலையில், வடகாடு கிராமத்தில் நேற்று (25.10.2026) நடந்த ஒரு திருமண வீட்டில் மைக் செட், சீரியல் பல்ப் தோரணங்கள் கட்டியுள்ளனர். இன்று (26.10.2026) அதனை எடுத்து வர சென்று வீட்டின் மேல் கைபிடி சுவர்கள…