Daily Thanthi
இன்ஸ்டாவில் 14 லட்சம் பாலோயர்ஸ்... தேர்தலில் வெறும் 33 ஓட்டுகள் - ராஜஸ்தான் பிரபலத்தின் அதிர்ச்சி தோல்வி
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய். சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 14 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். இது தவிர பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என ஓம்பிரகாஷ் பிஷ்னோய் முடிவு…