Hindu Tamil Thisai
டெல்லியில் 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்: தீபாவளியை முன்னிட்டு அரசு தீவிர நடவடிக்கை
புதுடெல்லி: “டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இனிப்பு பலகாரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய அதிரடி சோதனையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 948.9 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநில முதல்வர் ரேகா…