Nakkheeran
”கேள்வி கேட்டதால் ஆத்திரம்”; செய்தியாளரை உருவ கேலி செய்த ட்ரம்ப்
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3 அன்று இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மக்கள் பிரதிநிதிகளின் சபையின் 435 உறுப்பினர்களும், செனட் சபையின் 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்தால், நிதி மற்றும் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில், ஆளும் கட்சிக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால், இது மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கான்சாஸ் மாகாணத்தி…