Nakkheeran
“சௌரவ் தாஸ் இந்தியர்தானா?” - விசாரிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் இந்தியர்தானா என்பது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். மத்திய அரசு நடத்தும் விசாரணையில் சௌரவ் தாஸ் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் நீதித்துறை குறித்தும், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறான கருத்துகளை எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்…