உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தாம்பரம் காவல்துறையில் ‘ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்’ தொடக்கம்..!

தாம்பரம் மாநகர காவல்துறையின் ரோந்துப் பணிகளை நவீனமயமாக்கும் வகையில், 'ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.காவல் ஆணையர் அமல்ராஜ் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, நவீன வசதிகள் கொண்ட 73 இருசக்கர ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்தினார். குற்றங்களைத் தடுக்கவும், அவசர காலங்களில் விரைந்து செயல்படவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.