Daily Thanthi
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்ற கூட்டம் - முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்
சென்னை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டியிட்டு வரும் சூழலில், எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாக தமிழகத்தை நிலைநிறுத்த அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22 தேதி வரை நடைபெறவுள்ள உலகப்பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…