உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எவ்வளவு தேய்த்தாலும் போகாத கருகிய கறை... அடுப்படியில் இருக்கும் இந்த 6 பொருட்களைப் பயன்படுத்திப் பாருங்க

சமைக்கும்போது சிறிது கவனம் சிதறினால்கூட, பாத்திரத்தின் அடிப்பகுதியில் உணவுப் பொருட்கள் ஒட்டிக்கொண்டு கருகிவிடும். குறிப்பாக, எண்ணெய் அதிகமாக சூடாகும்போது அல்லது பாத்திரத்தில் உள்ள உணவு நீண்ட நேரம் அடுப்பில் இருக்கும்போது, அடிப்பிடித்து பிடிவாதமான கருப்புக் கறைகள் உருவாகின்றன. எஃகு மற்றும் அலுமினியப் பாத்திரங்களில் இதுபோன்ற கறைகள் ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று. இவற்றைச் சுத்தம் செய்வதுதான் பலருக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. எவ்வளவு நேரம் ஸ்க்ரப்பரைக் கொண்டு தேய்த்தாலும் சில கறைகள் எளிதில் நீங்காது. இதனால் பாத்திரத்தின் மேற்பரப்பும் சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால், இதற்காகக் கடைகளில் கிடைக்கு…