Nakkheeran
இன்னொரு நேபாளமா பூட்டான்?;இந்திய எல்லைக்குள் பாயும் பிரளயம்-இரண்டு மாநிலத்தை உலுக்கப்போகும் அபாயம்
பக்கத்து நாடான நேபாளத்தில் அண்மையில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிந்த சோகம் மறைவதற்குள்ளாகவே, தற்போது பூட்டான் தேசத்திலும் அதே போன்றதொரு இயற்கை பேரிடர் அரங்கேறியுள்ளது. பூட்டானின் வடமேற்கே அமைந்துள்ள காசா மாவட்டத்தின் லாயா கெவோக் பகுதியில், வக்கிலா மலைக்குக் கீழே உள்ள ‘சிண்டாபு’ என்ற ஆபத்தான பனிப்பாறை ஏரி அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 8:15 மணியளவில் திடீரென உடைந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியிலிருந்து சுமார் 7.4 மில்லியன் கன மீட்டர் அளவுள்ள பிரம்மாண்டமான வெள்ள நீர் ஒரே நேரத்தில் சீறிக்கொண்டு வெளியேறியுள்ளது. இந…