Polimer News
வரத்துக்குறைவால் தூத்துக்குடி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு..!
தொடர் கனமழை மற்றும் வரத்துக்குறைவால் தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ கத்திரிக்காய்80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 140 ரூபாய்க்கும் ஒரு கிலோ பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 150 ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 160 ரூபாய் வரையும் பல்லாரி கிலோ 70 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.