Indian Express Tamil
அரசு ஐ.டி.ஐ நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல்…