Samayam Tamil
Front load Washing Machine bad odor : பிரண்ட் லோடு வாஷிங் மெஷினில் துர்நாற்றம் வீசுகிறதா? 5 காரணங்களும் எளிய தீர்வுகளும்!
வீட்டில் துணிகளை சிரமம் இன்றி துவைக்க வாஷிங் மெஷின்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, குறைந்த தண்ணீரில் துணிகளைச் சிறப்பாகத் துவைக்கப் பலரும் ஃபிரண்ட் லோடு (Front Load) வாஷிங் மெஷின்களை விரும்பி வாங்குகின்றனர். ஆனால், இந்த மெஷினைப் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை துர்நாற்றம். சில நேரங்களில், வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்த பிறகும் அவற்றில் ஒருவித ஈரமான வாடை அல்லது விரும்பத்தகாத வாசனை வீசலாம். இதற்கு மெஷினின் உட்பகுதிகளில் தேங்கும் ஈரப்பதம், அழுக்கு மற்றும் சோப்புப் படிவுகள் தான் காரணம். குறிப்பாக, மெஷினை தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருப்பதும், துணிகளைத் துவைத்த பிறகு க…