Nakkheeran
மது பாட்டிலுக்கு ரூ. 10 விலை உயர்வா? : “உண்மை என்ன?” - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் இன்று (30.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இன்று காலையில் இருந்து டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை ரூ.10 உயர்த்தியுள்ளதாகச் சில செய்திகள் வெளியாகின. மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள்கூட, இந்தச் செய்தியைத் தவறாகப் புரிந்துகொண்டு, விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இது சற்று வருத்தமளித்தது. ஒரு செய்தி வெளியானால், அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு கருத்துத் தெரிவிப்பதுதான் முறையானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதற்கு முன்பு, ரூ.140 அதிகபட்ச சில்…