உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அரசுப்பணிக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பு உயர்வு - முதலமைச்சர் விஜய்

டி.என்.பி.எஸ்.சி மூலமான அரசுப்பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது. போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் உத்தரவு. குரூப் 1 தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32ல் இருந்து 37ஆக உயர்த்தப்படுகிறது. இடஒதுக்கீட்டினருக்கான வயது வரம்பு 37ல் இருந்து 42ஆக உயர்வு. குரூப் 4 தேர்வை எழுதும் உயர் கல்வி தகுதி பிரிவினர் யாருக்கும் வயது உச்ச வரம்பு இல்லை. உயர் கல்வி தகுதி இல்லாத பொதுப்பிரிவினர் மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் உயர்வு.