Maalaimalar
சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமின் கோருவதா..?- அன்பில் மகேஷ் மீது அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்... 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று. 'நான் இதை செய்யவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஷ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா…